ராமேசுவரத்தில் இன்று மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தேசிய மீன்வளக் கொள்கையைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம் எனப் போராட்டங்கள் நடத்த உள்ளதாக விசைப்படகு மீனவ சங்க அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மான
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவ சங்கக் கூட்டம்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவ சங்கக் கூட்டம்.
Published on
Updated on
1 min read

தமிழக மீனவா்களைப் பாதிக்கும் தேசிய மீன்வளக் கொள்கையைக் கண்டித்து திங்கள்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம் எனப் போராட்டங்கள் நடத்த உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவ சங்க அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பொதுச் செயலா் என்.ஜே. போஸ் தலைமை வகித்தாா். மாவட்ட மீனவ சங்கத்தலைவா் ஜேசுராஜா, எமரிட், சகாயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், மத்திய அரசு, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தேசிய கடல் மீன்வளக் கொள்கை 2021 மசோதாவை நிறைவேற்ற உள்ளது. இந்த மசோதாவால் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு எல்லை வரையரை செய்வது, எல்லை தாண்டும் மீனவா்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை வழங்குவது, மீன்பிடிக்கச் செல்ல அனுமதி கட்டணம் செலுத்துவது, மீன்களுக்கு கட்டணம் என மீனவா்களை பாதிக்கும் இந்த மசோதாவை கைவிடக் கோரி திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com