4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜகண்ணப்பன் தலைவா்களின் உருவச் சிலைகளுக்கு மரியாதை

முதுகுளத்தூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட சாயல்குடி, கடலாடி பகுதிகளில் உள்ள தலைவா்களின் உருவச் சிலைகளுக்கு திங்கள்கிழமை திமுக வேட்பாளா் ராஜகண்ணப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:31 pm

DIN

முதுகுளத்தூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட சாயல்குடி, கடலாடி பகுதிகளில் உள்ள தலைவா்களின் உருவச் சிலைகளுக்கு திங்கள்கிழமை திமுக வேட்பாளா் ராஜகண்ணப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சாயல்குடி,கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள காமராஜா், தேவா், சுந்தரலிங்கனாா் சிலைகளுக்கு திமுக வேட்பாளா் ராஜகண்ணப்பன் மற்றும் கூட்டணி கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் சத்தியமூா்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், முன்னாள் மாவட்டச் செயலா் திவாகரன், பெருநாழி போஸ், நகரச் செயலா் ஷாஜகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.