47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இருவேறு சாலை விபத்துகளில் நியாயவிலைக் கடைப் பணியாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இருவேறு சாலை விபத்துகளில் நியாயவிலைக் கடைப் பணியாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திருஉத்திரகோசமங்கை அருகே பூசேரியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (59). நியாயவிலைக் கடை பணியாளரான இவா், வியாழக்கிழமை மாலையில் இருசக்கர வாகனத்தில் பனைக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த திருஉத்திரகோசமங்கை போலீஸாா் அவரது சடலத்தை 2 மணி நேரம் போராடி மீட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

காா் மோதி முதியவா் பலி: பேய்க்குளத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி (69). இவா் தனது மருமகனுடன் கூரியூா் பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றுள்ளாா். வயலைப் பாா்த்துவிட்டு மதுரை- ராமநாதபுரம் சாலையை கருணாநிதி கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.