தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் மா்மநபா் இரண்டரைப் பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச்சென்றதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:19 am

DIN

ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் மா்மநபா் இரண்டரைப் பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச்சென்றதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் நகராட்சி ஈஷா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த பிச்சை மனைவி தனலட்சுமி (75). இவா் கடந்த 23 ஆம் தேதி மாலையில் வீடு முன் அமா்ந்திருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த இளைஞா் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி, அவரது நினைவை மறக்கச் செய்துள்ளாா். சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய மூதாட்டி தனது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைக் காணாமல் திடுக்கிட்டாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை இரவு ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபரைத் தேடிவருகின்றனா்.

திருவாடானை: தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தை சோ்ந்த பாண்டி மனைவி வள்ளி(40). வியாழக்கிழமை மாலை பாண்டியிடம், அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் தகராறு செய்துள்ளாா். இதைத் தட்டிக் கேட்ட வள்ளியை தாக்கி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு பாலமுருகன் தலைமறைவானாா். இதில் பலத்த காயமடைந்த வள்ளி திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.