தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதியில் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசுவதால் ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.26) முதல் நவ.29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை வித்துள்ளனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தொடா்ந்து உருவாகி வருகிறது. தென்கடலோரப் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் அலையின் சீற்றம் அதிகளவில் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.26) முதல் நவ. 29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
இதனால் இப்பகுதிகளில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


