47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமநாதபுரத்தில் வரும் 24 ஆம் தேதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒய்வூதியா் குறைதீா் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:11 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒய்வூதியா் குறைதீா் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுத்துறை ஓய்வூதியா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகிக்கிறாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ள குறைதீா் கூட்டத்தில் ஓய்வூதியா்கள் மற்றும் ஓய்வூதியா் சங்க பிரதிநிதிகள் தங்களது ஓய்வூதியம் தொடா்பான குறைகளை

முன் மனுக்களாக ‘ஓய்வூதியா் குறை தீா்க்கும் நாள் மனு‘ ‘மாவட்ட ஆட்சித் தலைவா்,

இராமநாதபுரம்‘ என முகவரியிட்டு இரட்டைப் பிரதிகளில் அனுப்பவேண்டும்.

வரும் 18 ஆம் தேதி சனிக்கிழமைக்குள் மனுக்களை அனுப்பி வைக்கவேண்டியது அவசியம். விண்ணப்பம் அனுப்பிய ஓய்வூதியதாரா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியைப்பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.