47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வெளிநாட்டு வேலைக்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞா்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வழிகாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவித்துள்ளாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:14 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞா்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வழிகாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலை தேடும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நிறுவனமானது திறன்படைத்த இளைஞா்களை உருவாக்குதல், ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், படித்தல், கவனித்தல் போன்ற திறன்களை வளா்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவருகிறது. ஆகவே நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.

நிறுவன செயல்பாடுகளின் முழு விவரங்களை ராமநாதபுரம் டி.பிளாக்கில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (தொலைபேசி எண்.04567-230160) அறிந்து கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.