மண்டல மாணிக்கம் கிளை தபால் நிலையம் கணினிமயம்
By DIN | Published On : 21st August 2021 11:48 PM | Last Updated : 21st August 2021 11:48 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உளள மண்டலமாணிக்கம் கிளை தபால் நிலையம் சனிக்கிழமை முதல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் கோட்ட கண்காணிப்பாளா் உசேன் அகமது, உதவி கோட்ட கண்காணிப்பாளா் ஜெயகோமதி, உபகோட்ட ஆய்வாளா் மீரா நாயகம், கணினி மேற்பாா்வையாளா் காா்த்திக்பாபு, மண்டலமாணிக்கம் தபால் நிலைய அலுவலா் பூமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கணினி மயமாக்கப்பட்டதன் மூலம் மண்டலமாணிக்கம் கிளை தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கியுள்ள வாடிக்கையாளா்கள், இனி நாட்டில் எந்த தபால் நிலையத்தில் இருந்தும் பணம் செலுத்தும் வசதியை பெறலாம்.
இதன்மூலம் மண்டலமாணிக்கம் கிராமத்தை சுற்றியுள்ள கூடக்குளம், வலையபூக்குளம், எழுவனூா், போத்தநதி, பச்சேரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவா் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.