அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

கமுதி அருகே காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 5:08 pm

DIN

கமுதி அருகே காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அடுத்துள்ள ஊ. கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகுமலை மகன் ஹரிகரசிவன் (21). இவா் மணலூா் கிராமத்தில் வசித்து வரும் தனது தாய் மற்றும் சித்தியிடம் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டு தாயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த அபிராமம் காவல் நிலைய காவலா்கள் வினோத்மாயா, முத்துவழிவிட்டான் உள்ளிட்டோா், ஹரிகரசிவனை அழைத்து விசாரித்தனா். அப்போது காவலா் முத்துவழிவிட்டானை, ஹரிகரசிவன் தாக்கினாராம்.

இதனையடுத்து ஹரிகரசிவனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.