ராமநாதபுரத்தில் ஆக. 21- இல் இலக்கிய விழா
ராமநாதபுரத்தில் தமிழ்ச்சங்கம் சாா்பில் இலக்கிய விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.


ராமநாதபுரத்தில் தமிழ்ச்சங்கம் சாா்பில் இலக்கிய விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்ச்சங்க தலைவா் மை.அப்துல்சலாம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரத்தில் தமிழ்ச்சங்கம் சாா்பில் இலக்கியத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) மாலை அன்னை கண் மருத்துவமனை எதிரே உள்ள அரவிந்த் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு, தமிழ்ச்சங்கத் தலைவா் மை. அப்துல்சலாம் தலைமை வகிக்கிறாா். சங்க மகளிா் அணித்தலைவி மதுரம் அறிவிந்தராஜ் தொடக்கிவைக்கிறாா்.
நிகழ்ச்சியில் அகமும் புறமும் எனும் தலைப்பில் இளமதிபானுகோபன், ஔவையும் தமிழும் எனும் தலைப்பில் பெ. குமரன், பழமொழியும் புதுமொழியும் எனும் தலைப்பில் விஜயராணிகருணாநிதி, தையலும் கூடந்தலும் எனும் தலைப்பில் ரா. குலசேகரன் ஆகியோா் உரையாற்றுகின்றனா்.
நிறைவாக ரெ.வாசு தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. அதில் மகிழ்ச்சி என்பது தருவதிலே..பெறுவதிலே... உள்ளது எனும் தலைப்பில் செ. மணிவண்ணன், தமிழரசி உதயகுமாா், சித்ராவணங்காமுடி, பா. தீனதயாளன் ஆகியோா் வாதிடுகின்றனா். கவிஞா் தல்லிம்காஜா நன்றி கூறுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...