ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரம்: நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பாக பணியாற்ற புகாா் பெட்டிகள் அறிமுகம்

ராமநாதபுரத்தில் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் அமைப்பதற்கான பாதுகாப்புப் பெட்டியை சமூகநலத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் வியாழக்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:16 pm

DIN

ராமநாதபுரத்தில் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் அமைப்பதற்கான பாதுகாப்புப் பெட்டியை சமூகநலத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் வியாழக்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட சமூகநலத்துறை அலுவலா் சாந்தி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் வாழ்த்திப் பேசினாா். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் 10 பேருக்கும் அதிகமாகப் பணிபுரியும் தனியாா் நிறுவனங்களில் அவா்களுக்கான பிரச்னைகள் குறித்த புகாா் அளிக்கும் வகையில் புகாா் பெட்டியை அமைச்சா் கீதாஜீவன் அறிமுகம் செய்துவைத்தாா். அதை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

பின்னா் அமைச்சா் பேசியது: தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக உயா்ந்துள்ள நிலையில், அவா்கள் பணியிடத்தில் சந்திக்கும் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் புகாா் பெட்டி அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதை குறிப்பிட்ட நாளுக்குள் திறந்து மனுக்களை ஆய்வு செய்வதற்கு சமூகநலத்துறை அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன், ராமநாதபுரம் நகராட்சித் தலைவா் கே. காா்மேகம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பவானிராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.