ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதுரையில் கைதி தப்பியோட்டம்: ராமநாதபுரம் தனிப்படை போலீஸாா் தேடுதல்

மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய பாலியல் வழக்குக் கைதியை தேடும் பணியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 2 தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய பாலியல் வழக்குக் கைதியை தேடும் பணியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 2 தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியூா் கடற்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனுடன் சென்ற பெண் 3 போ் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். அதுகுறித்து பத்மேஸ்வரன் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் பத்மேஸ்வரன் கடந்த வியாழக்கிழமை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான பரிசோதனையின் போது தப்பியோடிவிட்டாா். பத்மேஸ்வரன் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உத்தரவின்பேரில் கடுங்குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரஞ்சித் தலைமையில் 4 போ் கொண்ட தனிப்படையினா் மற்றும் கமுதி ஆய்வாளா் தலைமையிலான தனிப்படையினா் பத்மேஸ்வரனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.