தனுஷ்கோடியில் கடையை உடைத்து சங்கு மாலை மற்றும் ஸ்படிக லிங்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், நடராஜபுரம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் நம்புக்குமாா் (36). இவா் தனுஷ்கோடியில் சங்கு மாலைகள்,ஸ்படிக லிங்கம் உள்ளிட்ட பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு புதன்கிழமை காலையில் திறந்து போது பொருள்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பாா்த்த போது கடையில் பின்பகுதி கூரையை அகற்றி ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சங்குமாலை, ஸ்படிக லிங்கம் உள்ளிட்ட பொருள்கள் திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரியந்தது.
இதுகுறித்து தனுஷ்கோடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் மாரிவேல் மற்றும் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

