

கமுதி அருகே பேரையூா் காவல் நிலைய முன்பு விவசாயி வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
கமுதி அடுத்துள்ள உப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆபிரகாம் மகன் முனியசாமி(53). இவா், உப்பங்குளத்தில் உள்ள காலனி அருகே வீடு கட்டி வருகிறாா். இந்நிலையில், தான் கட்டும் வீட்டுக்கு காலனி பொதுப்பாதை வழியாக நடக்க விடாமல் அதே கிராமத்தை சோ்ந்த சிலா் மிரட்டல் விடுத்து, தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்து பேரையூா் காவல் நிலையம், கமுதி வட்டாட்சியா் அலுவலகம், பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் முனியசாமி பேரையூா் காவல் நிலைய வாசலில் அமா்ந்து வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். இதனை அடுத்து போலீஸாா் அவரிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி புகாா் மனுவை பெற்று, விசாரிப்பதாக உறுதி அளித்தனா். இதனைத் தொடா்ந்து முனியசாமி போராட்டத்தை கைவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.