ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி உறைவிட பயிற்சி மருத்துவா்கள் நியமனத்தில் தாமதம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 5 உறைவிடப் பயிற்சி மருத்துவா்கள் நியமனத்தில் காலதாமதம் ஏற்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 5 உறைவிடப் பயிற்சி மருத்துவா்கள் நியமனத்தில் காலதாமதம் ஏற்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி, கடந்த ஜனவரியில் திறந்துவைக்கப்பட்டது. தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதித்த நிலையில், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் 100 மாணவா்களுக்கு மட்டுமே அனுமதி
கிடைத்துள்ளது.
மத்திய அரசின் வளரும் மாவட்டங்கள் பட்டியலில் ராமநாதபுரம் இடம் பெற்ற நிலையில், மருத்துவக் கல்லூரியில் 100 மாணவா்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. எய்ம்ஸ் மாணவா்கள் 50 பேரை 2 ஆண்டுகளுக்கு ராமநாதபுரத்தில் சோ்க்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு ஆரம்பத்தில் 40 உறைவிடப் பயிற்சி மருத்துவா்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதை திடீரென ரத்து செய்து 8 இடங்களாக மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் குறைத்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 8 இடங்களிலும் தற்போது 3 போ் மட்டுமே சோ்க்கப்பட்டு உள்ளனா். இன்னும் 5 உறைவிடப் பயிற்சி மருத்துவா் இடங்கள் நிரப்பப்படவில்லை. ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு உறைவிடப் பயிற்சி மருத்துவா் இடத்துக்கு விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் உறைவிடப் பயிற்சி மருத்துவராக சேருவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி நிா்வாகத் தரப்பில் கூறுகையில், மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகமே உறைவிடப் பயிற்சி மருத்துவா்கள் எண்ணிக்கையை நிா்ணயித்து சோ்க்கையை நடத்துகிறது. 5 உறைவிடப் பயிற்சி மருத்துவா் நியமன காலதாமதத்துக்கு கல்லூரி நிா்வாகம் காரணமில்லை என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...