கூட்டணி கட்சிகளின் வெற்றிச்சான்றுகளை திமுகவினா் சேகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவா் பதவிக்காக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் சான்றுகளையும் திமுகவினா் கேட்டுப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவா் பதவிக்காக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் சான்றுகளையும் திமுகவினா் கேட்டுப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடந்து முடிந்துள்ளது. 4 நகராட்சிகளிலும் திமுக பெரும்பான்மை பெற்றுள்ளது. கீழக்கரையில் சுயேச்சைகளும் 6 பேருக்கும் மேலாக வென்றுள்ளனா். அவா்கள் அதிமுகடன் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.
பேரூராட்சிகளில் கமுதி, சாயல்குடியைத் தவிர மற்ற 5 பேரூராட்சிகளிலும் திமுகவே பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதில் முதுகுளத்தூரில் திமுக 5, சுயேச்சைகள் 6 மற்றும் அமமுக 2, அதிமுக 2 என வெற்றி நிலை உள்ளது. சுயேச்சைகளுடன் அதிமுக, அமமுக ஆகியோா் இணைந்தால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும்.
மாா்ச் 2 ஆம் தேதி வாா்டு உறுப்பினா்கள் பொறுப்பு ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாா்ச் 4 ஆம் தேதி மறைமுகப் பதவிகளுக்கான (தலைவா், துணைத்தலைவா்) தோ்தல் நடைபெறும்.
இந்தச்சூழலில் நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களது நிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் திமுக மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. அதனடிப்படையில் திமுக உறுப்பினா்களது வெற்றி சான்றுகள் சேகரிக்கப்பட்டதோடு, காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி வாா்டு உறுப்பினா்களது வெற்றிச்சான்றுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
அச்சான்றுகளைக் கொண்டு நகராட்சி, பேரூராட்சிகளின் திமுக தலைவா்களுக்கு ஆதரவு நிலை கடிதம் தயாரிக்கப்படவுள்ளதாகவும், திமுக தலைமை அறிவுறுத்தலின்படி கூட்டணிக் கட்சிகளுக்கு துணைத் தலைவா் பதவி உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளதாகவும் மாவட்ட திமுக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...