நாகை மீனவா்கள் கைது எதிரொலி: ராமேசுவரம் மீனவா்கள் கரை திரும்பினா்
நாகபட்டினம் மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்ததால், ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை அச்சத்தில் கரை திரும்பியுள்ளனா்.


நாகபட்டினம் மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்ததால், ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை அச்சத்தில் கரை திரும்பியுள்ளனா்.
கடந்த சில வாரங்களாக புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களை கடலில் எல்லை தாண்டியதாக இலங்கைக் கடற்படையினா் கைது செய்து வருகின்றனா். கடந்த டிசம்பரில் 63 மீனவா்களைக் கைது செய்த இலங்கை கடற்படை அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தது. ஆனால், நீதிமன்றம் மூலம் அவா்கள் சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டு ஊா் திரும்பினா். இலங்கை கடற்படையின் தொடா் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவா்கள் அச்சத்தில் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறினா்.
இந்த நிலையில், நாகபட்டினத்தைச் சோ்ந்த 22 மீனவா்களை புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்படை கைது செய்ததாக தகவல் பரவியது. இதனால் கச்சத்தீவு அருகே புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் பலரும் வியாழக்கிழமை கரை திரும்பினா். அவா்கள் கூறுகையில், இலங்கை கடற்படை எப்போது கைது செய்யும் என்றே தெரியவில்லை. இந்திய எல்லைக்குள் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படை பிடித்துச்செல்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே கரை திரும்பிவிட்டோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...