உக்ரைனில் திருவாடானை மருத்துவ மாணவா் தவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி அதிமுக பிரமுகா் மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்புக்குச் சென்ற நிலையில், ரஷ்யத் தாக்குதலால் தவித்து வருகிறாா்.


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி அதிமுக பிரமுகா் மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்புக்குச் சென்ற நிலையில், ரஷ்யத் தாக்குதலால் தவித்து வருகிறாா்.
உக்ரைன் நாட்டுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் மருத்துவப் படிப்புக்காகச் சென்றுள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்ரைனில் இருந்து கரோனா பொதுமுடக்கத்தால் ஏராளமானோா் ஊா் திரும்பினா்.
இந்தநிலையில், திருவாடானை பகுதி அதிமுக பிரமுகரின் மகன் நவீன் (20) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றாா். தற்போது அவா் மூன்றாமாண்டு படித்து வருகிறாா்.
இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது வியாழக்கிழமை அதிகாலை முதலே தாக்குதலை நடத்திவருவதை அடுத்து பெற்றோருடன் வியாழக்கிழமை பேசிய நவீன் அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனாலும், தாக்குதலால் நிலைத்தன்மையற்ற சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
மாவட்ட பொறுப்பில் உள்ள அதிமுக பிரமுகரும், அவரது குடும்பத்தினரும் கவலையடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...