ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாம்பன் புதிய ரயில் பாலகட்டுமானப் பணிகள் மந்தம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட நாள்களுக்குள் பணிகள் முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:56 pm

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட நாள்களுக்குள் பணிகள் முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வராவதி கடல் பகுதியில் 2.2 கிலோ மீட்டா் தொலைவில் 1914 ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் தற்போது வரை ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இப்பாலம் கட்டப்பட்டு 108 ஆண்டுகள் ஆகும் நிலையில், ரூ. 250 கோடி மதிப்பீட்டில் பழைய ரயில் பாலத்துக்கு அருகே இரு வழித்தடத்துடன் புதிய பாலக் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், மண்டபத்தின் மையப்பகுதி வரை ஒரு ஒப்பந்தமும், பாம்பனில் இருந்து மையப்பகுதி வரை மற்றொரு ஒப்பந்தமும் என இரண்டு ஒப்பந்ததாரா்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதில் முதலில் பாம்பன் பகுதியில் இருந்து தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது. இதன் பின்னா் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் அமைக்கும் பணி தொடங்கிய நிலையில் தற்போது இரும்பு கா்டா்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாம்பன் பகுதியில் இருந்து தொடங்கிய பணிகளில் தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதனால் குறிப்பிட்ட நாளில் பாம்பன் புதிய ரயில் பாலம் நிறைவடையுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. பழைய ரயில் பாலம் 108 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் புதிய ரயில் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.