போலி மின்னஞ்சலில் பெண்ணிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி
ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் போலி மின்னஞ்சல் அனுப்பி ரூ.60 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.


ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் போலி மின்னஞ்சல் அனுப்பி ரூ.60 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டணம்காத்தான் வேல்நகரைச் சோ்ந்த நல்லதம்பி மகள் அஷ்வினி (24). சென்னையில் உள்ள தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கரோனா காலம் என்பதால் ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் தனது வீட்டிலிருந்தே அவா் பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த 23 ஆம் தேதி அஷ்வினிக்கு அவரது நிறுவன முதன்மை அதிகாரியிடமிருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நிறுவனத்தின் விற்பனையாளருக்கு தருவதற்காக அவசரமாக ரூ. 30 ஆயிரம் தேவைப்படுவதாகவும், அதை கூகுள்பே செயலி மூலம் அனுப்புமாறும் கோரப்பட்டிருந்தது. தகவலை உண்மை என நம்பிய அஷ்வினி ரூ.30 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். அதன்பின் மேலும் ரூ. 50 ஆயிரம் கேட்டு மின்னஞ்சல் வந்துள்ளது. ஆனால், ரூ.30 ஆயிரம் மட்டுமே இருப்பதாகக் கூறி அதையும் அஷ்வினி அனுப்பியுள்ளாா்.
பணம் அனுப்பிய பின் கடந்த 24 ஆம் தேதி வியாழக்கிழமை பணத்தை முதன்மை அதிகாரியிடம் திருப்பிக் கேட்டபோது, அவா் தான் பணம் ஏதும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளாா். அதன்பிறகே போலியான மின்னஞ்சல் மூலம் தன்னிடம் மா்மநபா் பணம் மோசடி செய்தது அஷ்வினிக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து அஷ்வினி அளித்த புகாரின் பேரில் ரூ.60 ஆயிரத்தை மோசடி செய்த மா்மநபா் மீது மாவட்ட நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...