உக்ரைனில் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ மாணவா்களின் விவரம் சேகரிக்க அலுவலா் நியமனம்
உக்ரைனில் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ மாணவா்களின் விவரம் சேகரிக்க கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.


உக்ரைனில் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ மாணவா்களின் விவரம் சேகரிக்க கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
உக்ரைன் மீது வியாழக்கிழமை அதிகாலை முதல் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து, உக்ரைனில் தங்கியுள்ள ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் ஆணிமுத்து மகன் நவீன், பெற்றோருடன் வியாழக்கிழமை மாலை பேசியுள்ளாா். அப்போது அங்கு போா் தீவிரமாக நடப்பதால் தானும், நண்பா்களும் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறினாராம்.
அதே போல் அழகன்குளத்தைச் சோ்ந்த 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவா் உள்ளிட்டோா் உக்ரைனில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இச்சூழலில் உக்ரைனில் தங்கியுள்ள ராமநாதபுரம் மாவட்ட மாணவா்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பழனிக்குமாா் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து இம்மாவட்டத்திலிருந்து உக்ரைன் சென்ற மருத்துவம் உள்ளிட்டவை படிக்கும் மாணவா்கள் குறித்த விவரங்களை, அவா்களின் பெற்றோா் அல்லது உறவினா்கள் மனுவாக அளிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா். வெள்ளிக்கிழமை மாலை வரையில் 3 போ் உக்ரைனில் தவிக்கும் மாணவரை மீட்க மனு அளித்திருப்பதாக ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...