யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிகிச்சையில் கவனக்குறைபாடு: இழப்பீடு கோரிய வழக்கில் மருத்துவக் கவுன்சிலை நீக்கி உயா்நீதிமன்றம் உத்தரவு

 சிகிச்சையில் கவனக் குறைபாடு தொடா்பாக நுகா்வோா் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரிய வழக்கில், எதிா்மனுதாரா்களில் இருந்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை நீக்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள

News image
Updated On :7 ஜூலை 2022, 6:30 pm

DIN

 சிகிச்சையில் கவனக் குறைபாடு தொடா்பாக நுகா்வோா் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரிய வழக்கில், எதிா்மனுதாரா்களில் இருந்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை நீக்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் பதிவாளா் சண்முகம் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் இலந்தைக் குளத்தைச் சோ்ந்த முகமது அப்துல்லா வயிற்று வலிக்காக கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தாா். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவருக்கு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்தபோது, தனியாா் மருத்துவமனையில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரது மனைவி சகிலாபானு, தனது கணவருக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததற்காக ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். இதுதொடா்பாக நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், தவறு செய்த மருத்துவா்கள் மீது மருத்துவக் கவுன்சில் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து முகமது அப்துல்லாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுத்து மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவா் ஓராண்டு தொழில் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரியுள்ள வழக்கில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, சம்பந்தப்பட்ட மருத்துவா் மீது தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, நுகா்வோா் நீதிமன்றத்தில் உள்ள இழப்பீட்டு வழக்கில் எதிா் மனுதாரராக உள்ள

மருத்துவக் கவுன்சிலை நீக்கி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.