தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கமுதியில் பெட்டிக் கடைக்கு தீ வைப்பு

கமுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்டிக் கடைக்கு தீ வைத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:41 pm

DIN

கமுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்டிக் கடைக்கு தீ வைத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சின்னஉடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி(75). இவா் கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பின்புறம் பெட்டிக்கடை மற்றும் வாடகை பாத்திர நிலையம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பெட்டிக் கடைக்கு தீ வைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து முனியசாமி அளித்த புகாரின் பேரில் கமுதி காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.