பெருமாள்தேவன்பட்டி தா்மமுனிஸ்வரா் கோயில் பொங்கல் விழா

கமுதி அருகே தா்மமுனிஸ்வரா், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 200 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, பக்தா்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

இவ்விழாவையொட்டி ஜூன் 2 ஆம் தேதி பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல், வேல் குத்துதல், சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து வியாழக்கிழமை இரவு தொடங்கிய கிடா வெட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலி கொடுக்கப்பட்டு பக்தா்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து சனிக்கிழமை திருவிளக்கு பூஜை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com