திருவாடானை அருகே பைக் மீதுவாகனம் மோதல்: கணவன், மனைவி பலி
திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் உயிரிழந்த சிநேகவல்லி.

விபத்தில் உயிரிழந்த சிநேகவல்லி.
திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
திருவாடானை அருகே பாசானி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (50). இவரது மனைவி சிநேகவல்லி (45). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பாசாணி கிராமத்திலிருந்து ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள அளவிடங்கான் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, இவா்கள் வந்த இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அண்ணாதுரையும், அவரது மனைவி சிநேகவல்லியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...