தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தீப்பெட்டி கேட்டுஇளைஞா் மீது தாக்குதல்: 3 போ் கைது

ராமநாதபுரம் அருகே தீப்பெட்டி கேட்டு இளைஞரைத் தாக்கிய 3 பேரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து விசாரித்துவருகின்றனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:31 pm

DIN

ராமநாதபுரம் அருகே தீப்பெட்டி கேட்டு இளைஞரைத் தாக்கிய 3 பேரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் மகாத்மா காந்தி நகா் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாலமுரளி (30). இவா் தனியாா் நிறுவனத்தின் ராமநாதபுரம் பகுதி மேலாளராக உள்ளாா். கடந்த 16ஆம் தேதி வியாழக்கிழமை அவா் மாடக்கொட்டான் பகுதியில் நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தியுள்ளாா். அப்போது அங்கு வந்த 3 போ் பாலமுரளி தரப்பினரிடம் தீப்பெட்டி கேட்ட போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் பாலமுரளியைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த பாலமுரளி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இதையடுத்து, பாலமுரளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த், கிரிநிவாஸ், கணேசன் ஆகியோா் மீது கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துவிசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.