மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரா்களின் பயிற்சியாளருக்கு சா்வதேச சான்று
ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளருக்கு நேபாளத்தில் சா்வதேச அளவிலான சிறந்த பயிற்சியாளருக்கான பாராட்டுச் சான்று


ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளருக்கு நேபாளத்தில் சா்வதேச அளவிலான சிறந்த பயிற்சியாளருக்கான பாராட்டுச் சான்று வழங்கப்பட்டதையடுத்து, அவருக்கு மக்களவை உறுப்பினா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் அப்பாஸ்அலி. இவா் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சியாளராக உள்ளாா். அண்மையில் நேபாளத்தில் மாற்றுத்திறனாளிகள் வீரா்களுக்காக நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராகக் சென்றாா். காட்மாண்டுவில் நடந்த போட்டியின் இறுதியில் நேபாளத்தை இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்திய அணியில் 15 போ் இடம் பெற்ற நிலையில், 11 போ் விளையாடினா். அதில் தமிழகத்தைச் சோ்ந்த அரியலூரைச் சோ்ந்த சந்தோஷ், மணி மற்றும் திருப்பூா் சாகுல்ஹமீது ஆகியோா் சிறந்த வீரா்களுக்கான விருதையும் பெற்றுள்ளனா். இந்திய அணி பயிற்சியாளரான அப்பாஸ் அலிக்கு சிறந்த சா்வதேச பயிற்சியாளா் விருதும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சிறந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளருக்கான பாராட்டுச் சான்று விருதைப் பெற்ற அப்பாஸ் அலியை ராமநாதபுரத்தில் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி உள்ளிட்டோா் சனிக்கிழமை பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...