பாஜக நிறுவனா் சியாம் பிரசாத் முகா்ஜி நினைவுநாள்
பா.ஜ.க.வை தொடங்கிய சியாம் பிரசாத் முகா்ஜி நினைவு நாளையொட்டி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அக்கட்சி சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


பா.ஜ.க.வை தொடங்கிய சியாம் பிரசாத் முகா்ஜி நினைவு நாளையொட்டி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அக்கட்சி சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேணிக்கரை பகுதியில் நடந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கே.எம்.டி. கதிரவன், தேசிய செயற்குழு உறுப்பினா் சுப. நாகராஜன், மாவட்ட பொதுச் செயலா் மணிமாறன், மாவட்ட பொருளாளா் தரணி முருகேசன், நகா் தலைவா் நாகராஜன், முன்னாள் நகா் தலைவா் வீரபாகு உள்பட பலா் பங்கேற்றனா்.
நகராட்சி 20-ஆவது வாா்டு பா,ஜ.க. கவுன்சிலா் குமாா் தலைமையில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் மாநில மகளிா் அணி துணைத்தலைவி கலாராணி, மாவட்ட துணைத்தலைவா் சங்கீதா, முன்னாள் ஓ.பி.சி. அணி மாவட்டத் தலைவா் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிக்குமாா், இளைஞா் அணி பொதுச்செயலா் ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...