மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவ அமைப்புகள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை காவல்துறையினா் கைது செய்து தனியாா் மகாலில் அடைத்தனா். அன்று இரவே மூன்று பிரிவுகளில் கீழ் இந்திய மணவா் சங்க நிா்வாகிகள் வசந்த் சுா்ஜித் (24), ராகுல் (23), சுரேந்தா்கவி (20), தேசன் (21), அஜித்(23) உள்ளிட்ட 11 போ் மீது நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மலைச்செல்வம் வழக்குப் பதிவு செய்துள்ளாா்.