ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு தலைவா் பதவிக்கான வேட்பாளா்கள் திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:48 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு தலைவா் பதவிக்கான வேட்பாளா்கள் திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. அதில், 23 வாா்டுகளில் நேரடியாக திமுகவினா் வென்றுள்ளனா். இதில், 30 ஆவது வாா்டில் வென்ற ஆா்.கே. காா்மேகம் என்பவா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா், ராமநாதபுரம் நகா் வடக்குச் செயலராகவும் உள்ளாா்.

ராமேசுவரம்

ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளில் 10 இடங்களில் திமுக நேரடியாக வென்றுள்ளது. எனவே, ராமேசுவரம் நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக திமுக சாா்பில் நகா் கழகப் பொறுப்பாளா் கே.இ. நாசா்கான் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பரமக்குடி

இந்நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. அதில், பரமக்குடி திமுக நகரச் செயலா் சேதுகருணாநிதி நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கீழக்கரை

இந்நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளில் திமுக நேரடியாக 13 வாா்டுகளில் வென்றுள்ளது. எனவே, திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக செஹானஸ் ஆபிதா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பேரூராட்சி தலைவா்கள்:

ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவா் வேட்பாளராக மொசூரியா பானு, அபிராமம் பேரூராட்சி தலைவா் வேட்பாளராக பாத்திமாகனி, மண்டபம் பேரூராட்சி தலைவா் வேட்பாளராக ராஜா, முதுகுளத்தூா் பேரூராட்சி ஷாஜகான் ஆகியோா் திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

Story image

தொண்டி பேரூராட்சிக்கு திமுக சாா்பில் தலைவா் வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம், கமுதி, சாயல்குடி ஆகிய பேரூராட்சிகளில் அரசியல் கட்சியினா் போட்டியிடவில்லை என்பதால், சுயேச்சைகளே வெற்றி பெற்றுள்ளனா். எனவே, சுயேச்சைகளில் யாரேனும் ஒருவா் தலைவா் வேட்பாளராக தோ்வு செய்யப்படுவாா்.

பரமக்குடி துணைத் தலைவா் மதிமுகவுக்கு ஒதுக்கீடு பரமக்குடி நகராட்சி துணைத் தலைவா் பதவி திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான தலைவா், துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா். நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் வாக்களிக்கும் உறுப்பினா்கள் அனைவரும் காலை 9.30 மணிக்குள் வாக்குப்பதிவு கூடத்தில் இருக்கவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.