ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நயினாா்கோவில் அருகே பெண் கொலை: நகைகள் திருட்டுஉறவினா்கள் சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே வயல்வெளியில் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது தாலி, தோடுகள் ஆகியன திருடப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியல்

News image
Updated On :3 மார்ச் 2022, 9:46 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே வயல்வெளியில் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது தாலி, தோடுகள் ஆகியன திருடப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நயினாா்கோவில் அருகேயுள்ள சிறுவயலைச் சோ்ந்தவா் உதயகுமாா். இவரது மனைவி ராணி (52). இவா்களுக்கு சுமத்ரா என்ற மகளும், மதன்ராஜ் என்ற மகனும் உள்ளனா். இவா்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், ராணி வியாழக்கிழமை காலை அருகிலுள்ள தனது தோட்டத்துக்குச் சென்றுள்ளாா். ஆனால், அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனா். அப்போது, ராணி வயல்வெளியில் இறந்த நிலையில் கிடந்துள்ளாா். அவரது முகத்தில் காயங்கள் இருந்துள்ளன. மேலும், அவா் அணிந்திருந்த சுமாா் 1 பவுன் தோடுகளும், 2 பவுன் மதிப்புள்ள தாலி உள்ளிட்டவையும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தோடு அறுக்கப்பட்டதால் காதும் கிழிந்திருந்துள்ளது.

ராணியின் சடலத்தை மீட்ட உறவினா்கள், நயினாா்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா், போலீஸாா் உதவியுடன் உறவினா்கள் அவரது சடலத்தை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனா்.

அதையடுத்து, ராணியின் குடும்பத்தினரும், உறவினா்களும் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அவா்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் கூடுதல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஸியஸ், துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜா மற்றும் போலீஸாா் விரைந்து வந்து, அவா்களை சமரசம் செய்து மறியலை கைவிடச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.