ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைனிலிருந்து ராமநாதபுரம் மாணவா்களை மீட்க நடவடிக்கை: பாஜக மாவட்டத் தலைவா் தகவல்

 உக்ரைன் நாட்டில் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மாணவா்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய அனைவரையும் மத்திய அரசு மீட்கும்

News image
Updated On :4 மார்ச் 2022, 4:58 pm

DIN

 உக்ரைன் நாட்டில் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மாணவா்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய அனைவரையும் மத்திய அரசு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் கூறினாா்.

ராமநாதபுரத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 46 மாணவா்கள் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனா். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் நிலை ஏற்பட்ட போது, மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து 11 போ் ஊா் திரும்பினா். மேலும் 4 போ் மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனா். அவா்களில் 2 போ் புதுதில்லியில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஓரிரு நாள்களில் வருவா். உக்ரைனில் சுமி எனும் பகுதியில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த 20 மாணவா் உள்ளிட்ட 250 போ் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களை மீட்கும் நடவடிக்கையில் மாவட்ட பாஜக ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் வெளியுறவுத்துறையுடன் தொடா்பு கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைவரும் உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்படுவது உறுதி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.