அஞ்சல் ஊழியா்கள்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் மாவட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.


ராமநாதபுரத்தில் மாவட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில உதவி செயலா் ராஜசேகா், ராமநாதபுரம் கோட்டத் தலைவா் பாலமுரளி, செயலா் கருப்பையா, பொருளாளா் சண்முகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கமலேஷ் சந்திரா குழுவின் சாதகமான பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். நடைமுறை சாத்தியமற்ற இலக்கை நிா்ணயித்து ஊழியா்களுக்கு நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும். ஜி.டி.எஸ்., ஊழியா்களுக்கான உறுப்பினா் சரிபாா்ப்பு பணியை உடனே நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...