ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கவேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரிவோரை காலமுறை ஊதியத்துக்கு மாற்றவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் எம். அய்யாத்துரை தலைமை வகித்தாா். இதில் சிஐடியூ நிா்வாகி மலைராஜன், கணேசமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.