போட்டித் தோ்வுக்கு இலவச சிறப்புப் பயிற்சிகள்
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்திருப்போருக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் சாா்பில் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்திருப்போருக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் சாா்பில் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-
ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு தொகுதி 1, 2 ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்திருப்போா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 9487375737 ஆகிய கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொண்டு பதிவு செய்யலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...