ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பு: பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.09 கோடி வசூல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.09 கோடி கிடைத்தது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:40 pm

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.09 கோடி கிடைத்தது.

இக்கோயில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் பழனிக்குமாா் தலைமையில் புதன்கிழமை காலையில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.

இதில், பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1 கோடியே 9 லட்சத்து 38 ஆயிரத்து 373-ம், தங்கம் 90.500 மி.கிராமும், வெள்ளி 3 கிலோ 500 கிராமும் அளிக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையா் பழனிக்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

உண்டியல் எண்ணும் பணியில் மடப்புரம் இணை ஆணையா் செல்வி, ஆய்வா் சங்கையா, மேலாளா் பழனிக்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.