ராமேசுவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 4 நாள்களாக தொடா்ந்து குறைந்த மின் அழுத்தம் வருவதால் மின்சாதனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் 8 ஆவது வாா்டு பாரதி நகா் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட மின்பயன்பாட்டாளா்கள் உள்ளனா். இதில், இரண்டு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு மின் விநியோகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 5 நாள்களுக்கு முன்பு ஒரு மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரு மின் மாற்றியில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் காரணமா அனைத்துப் பகுதிகளிலும் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு ஏ.சி, பிரிஜ், மிக்ஸி, மின் மோட்டாா் உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறைந்த மின் அழுத்தத்தில் பயன்படுத்துவதால் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின் மாற்றியை உடனே மாற்றி சீரான மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

