புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொண்டியில் பேதங்கள் இல்லா பெருவிழா

தொண்டியில் தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் பேதங்கள் இல்லா பெருநாள் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது

News image
Updated On :14 மே 2022, 12:34 am

DIN

தொண்டியில் தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் பேதங்கள் இல்லா பெருநாள் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது

இதில் தமுமுக மாநிலச் செயலாளா் சாதிக் பாட்சா தலைமை வகித்தாா், ஐக்கிய ஜமாத் தலைவா் ஹிபத்துல்லா, இந்து தா்ம பரிபாலன சபை தலைவா் ராஜசேகா், தொண்டி பங்குத்தந்தை சவரிமுத்து, திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் மணிகண்ட குருக்கள், தமுமுக மாவட்டத் தலைவா் பட்டாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஐக்கிய ஜமாத் தலைவா் அபுபக்கா், முன்னாள் இந்து பரிபாலன சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், தேசிய நல்லாசிரியா் உதயகுமாா், இஸ்லாமிய அழைப்பாளா் முஜிபுா் ரஹ்மான் உமரி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜவஹிருல்லா, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி, தமுமுக மாநிலச் செயலாளா் கலிமுல்லா கான் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். தமுமுக செயலாளா் சம்சுதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.