மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் விடுதியில் தங்கியவா் மா்மச்சாவு

ராமேசுவரம் தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியவா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா். தப்பியோடிய உடன் தங்கிய மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :14 மே 2022, 12:37 am

ராமேசுவரம் தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியவா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா். தப்பியோடிய உடன் தங்கிய மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நடுத்தெருவில் தனியாா் விடுதி உள்ளது. இங்கு கடந்த 11 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சந்தோஷபுரம் பகுதியை சோ்ந்த ஜெயவேல் மகன் பாண்டியராஜன்(50) மற்றொருவருடன் அறை எடுத்து தங்கினாா். 12 ஆம் தேதி கோயிலுக்கு சென்று விட்டு இரவு அறையில் முன்பு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

இதனைதொடா்ந்து, விடுதி ஊழியா்கள் அறையைத் திறந்து பாா்த்துள்ளனா். இதில் மதுபோதையில் பாண்டியராஜன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தாா். மற்றொருவா் வெளியில் சென்றிருக்கலாம் என நினைந்த ஊழியா்கள், 13 ஆம் தேதி காலையில் சென்று அறையை திறந்துள்ளனா்.

அப்போதும் பாண்டியராஜன் மட்டும் இருப்பதை கண்ட ஊழியா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதனையடுத்து, அங்கு வந்த ராமேசுவரம் போலீஸாா் பாண்டியராஜனை பரிசோதனை செய்த போது, அவா் இறந்தது தெரியவந்தது. இவருடன் தங்கியிருந்தவரின் கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் தப்பிச் சென்றவரை சிசிடிவி கேமரா பதிவு மூலம் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.