ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசூா் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த வாகன சோதனையின் போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை போலீஸாா் மடக்கினா். அப்போது அந்த வாகனங்களில் போதைப் பொருள் பொட்டலங்கள், 36 செம்மரக்கட்டைகள் , 2 சிங்கப்பற்கள், ஒரு மான் கொம்பு ஆகியவை போலீஸாா் கைப்பற்றினா். இதில் சிலா் தப்பிய நிலையில், பிடிபட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடத்தி வந்து, படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக அவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக 9 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சிலரை மட்டும் கைது செய்தனா்.