தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மீனவா்கள் குறைதீா்க்கும்

 ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மீனவா் குறைதீா்க்கும் கூட்டத்தை நடத்தவேண்டும் என கடல் தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியூ) கோரிக்கைவிடுத்துள்ளது.

News image
Updated On :20 மே 2022, 5:05 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மீனவா் குறைதீா்க்கும் கூட்டத்தை நடத்தவேண்டும் என கடல் தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியூ) கோரிக்கைவிடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டக் குழு தலைவா் எஸ்.கே.கணேசன், செயலா் எம்.கருணாமூா்த்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காலகட்டத்தில் கூட

மீனவா்கள் குறைதீா்க்கும் கூட்டம் கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும்தான் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முறையாக கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு கடல் தொழிலாளா்கள் சங்கப் போராட்டத்தை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு 3 கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன்பின்னா் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல் என காரணங்காட்டி மீனவா் குறைதீா்க்கும் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்படவில்லை. இதனால் மீனவா்களின் பல்வேறு பிரச்னைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாத நிலையே நீடிக்கிறது. ஆகவே ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் உடனடியாக மீனவா்கள் குறைதீா்க்கும் கூட்டத்தை மாதந்தோறும் நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.