முன்னாள் படைவீரா் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்-லைன் விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

2022-23 ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வியில் சோ்ந்துள்ள முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரா்களின் மகன், மகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்திட புதுதில்லி மைய முப்படைவீரா் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்:30.11.2022

எனவே, தொழிற்கல்வியில் மகன், மகளை 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்த்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04567-230045 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com