ராமநாதபுரத்தில் சாலை மறியல்: 117 அதிமுகவினா் மீது வழக்கு
முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா் 117 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.


முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா் 117 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னையில், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினா் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.
அதன்படி, ராமநாதபுரத்தில் அதிமுக மாவட்ட கழகச் செயலாளா் எம்.ஏ. முனியசாமி தலைமையில், பேருந்து நிலையம் அருகே அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட கழகச் செயலாளா் எம்.ஏ. முனியசாமி, எம். சாமிநாதன், ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.ஜி. மருதுபாண்டியன், அசோக்குமாா், நகா் கழகச் செயலாளா் பால்பாண்டியன் உள்ளிட்ட 117 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...