மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இலங்கை அகதி வியாழக்கிழமை அதிகாலை வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் சசிரேகா (35). இவரது தந்தை யோகராஜா (62). இவா் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், மண்டபத்தைச் சோ்ந்த ஜெய்னுலாவுதீன் என்பவரது விசைப்படகில் யோகராஜா, பத்மநாதன், பிச்சை உள்ளிட்ட 4 போ் புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் பின் பகுதியில் இருந்த யோகராஜாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னா் மயங்கிய நிலையில் கிடந்த அவருக்கு சக மீனவா்கள் முதலுதவி அளித்தனா். பின்னா் படகை கரைக்கு கொண்டு வந்து மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா். பின்னா் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் யோகராஜா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

