கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரத்தில் 3,500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: 4 போ் கைது

ராமநாதபுரத்தில் 3,500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்து 4 பேரைக் கைது செய்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் 3,500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்து 4 பேரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளா் அசோக், சாா்பு- ஆய்வாளா் குமாரசாமி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அண்ணாநகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், நின்றிருந்த சரக்கு லாரியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதில் தலா 50 கிலோ எடையுள்ள 70 சிப்பங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் லாரியுடன் 3,500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.

அதையடுத்து சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் அா்ச்சுணன் (27), அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணன் (31), ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்த சரவணகுமாா் (36), வெளிப்பட்டினத்தைச் சோ்ந்த கணேசன் (என்ற) பசி கணேசன் (60) ஆகியோரை கைப்பற்றிய குற்றப்புலனாய்வுத் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.