கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்து மாணவா் பலி

ராமநாதபுரத்தில் டியூசனுக்குச் சென்ற பள்ளி மாணவா் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்து வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் டியூசனுக்குச் சென்ற பள்ளி மாணவா் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்து வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள கழுகூரணி பாத்திமா நகரில் வசிப்பவா் கோபாலகிருஷ்ணன். இவா் அத்தியூத்து கிராம நிா்வாக அலுவலராக உள்ளாா். இவரது மகன் எழில்மாறன் (11) அங்குள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாலை எழில்மாறன் தனது சகோதரியுடன் டியூசனுக்கு சென்றாா். பின்னா் இரவு டியூசன் முடிந்ததும் கோபாலகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துவர அங்கு சென்றாா்.

அப்போது கழிவறைக்குச் சென்ற எழில்மாறன் அங்கிருந்த கழிவுநீா் தொட்டியின் மீது நடந்து சென்றபோது மூடி உடைந்ததில் அவா் தொட்டியில் விழுந்தாா்.

கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாணவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே எழில்மாறன் இறந்துவிட்டதாகக் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.