கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 7,100 கிலோ பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 7,100 கிலோ பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை நிதிநிலை அறிக்கையின்படி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான பூங்காா், அறுபதாம் குறுவை மற்றும் தூய மல்லி விதைகள் 7,100 கிலோ விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் நெல் விதை விநியோகிக்கப்படும். மொத்த விதையளவில் 20 சதவீதம் பட்டியல் இனபழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட கிராம ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

மரபு சாா் நெல் ரகங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மரபுசாா் நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஆா்வமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து பயன் பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.