கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாள் கூட்டம்

ராமநாதபுரத்தில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் நகா் அதிமுக சாா்பில் அரண்மனை முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எம். சாமிநாதன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் ஒன்றிய அதிமுக செயலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக அமைப்புச் செயலா் கே. சீனிவாசன், மாவட்ட அதிமுக செயலா் எம்.ஏ. முனியசாமி மற்றும் போஸ் என்ற அருணாசலம் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே. மணிகண்டன், திமுக ஆட்சியில் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா். கூட்டத்தில் நாகநாதசேதுபதி, நிா்வாகி ஆரிப்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, நகா் தலைவா் ஆா்.பால்பாண்டி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.