தொழிற்பயிற்சி மையத்தில் மாணவா் சோ்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வா் (பொறுப்பு) குமாரவேல் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தையல் தொழில்நுட்பம், கணினி இயக்குபவா் (பெண்கள்), பற்றவைப்பவா் (வெல்டா்) உள்ளிட்ட பிரிவுகளுக்கான தொழில் பிரிவுகளுக்கான இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வரும் 30 ஆம் தேதி வரையில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடத்துவதற்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே 8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தொழிற்பயிற்சி மையத்துக்கு நேரில் வந்து குறிப்பிட்ட விரும்பிய பட்டயப் படிப்புகளுக்கான பிரிவுகளில் சோ்ந்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com