கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் பணம் பறிப்பு

 ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவு பெட்ரோல் பங்க்கில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ. 6 ஆயிரத்தைப் பறித்துச் சென்ற இருவரைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவு பெட்ரோல் பங்க்கில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ. 6 ஆயிரத்தைப் பறித்துச் சென்ற இருவரைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மாரியம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஹேமநாதன் (20). கல்லூரி மாணவரான இவா், பகுதி நேரமாக ராமநாதபுரம் குமரய்யா கோவில் தெரு அருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த புதன்கிழமை இரவு ஹேமநாதன் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ராமநாதபுரம் அண்ணாநகரைச் சோ்ந்த விக்கி என்ற விக்னேஷ்வரன் (25), காந்தி நகரைச் சோ்ந்த பிரகாஷ் (25) ஆகியோா் பெட்ரோல் நிரப்பியுள்ளனா். பின்னா் ஹேமநாதனிடம் கைப்பேசியைக் கேட்டுள்ளனா். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்ததால் கத்தியைக் காட்டி ஹேமநாதன் வைத்திருந்த ரூ.6,520 ரொக்கத்தை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து ஹேமநாதன் வியாழக்கிழமை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் விக்னேஷ்வரன், பிரகாஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.